மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மதியம் கலந்தாய்வு + "||" + Government allotted MBBS in medical studies. Vacancies filled: Consultation for administrative allotment seats this afternoon

மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மதியம் கலந்தாய்வு

மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மதியம் கலந்தாய்வு
மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. இதன்படி, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மதியம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை, -

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 18-ந ்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கும், அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

அந்த வகையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. பொதுப்பிரிவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 182 எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 206 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 68 பி.டி.எஸ். இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 965 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் இருந்தன.

தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்த பி.டி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 65 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) காலையுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. பிற்பகலில் இருந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கி, நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2. மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு - நாளை மறுதினம் தொடக்கம்
மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
3. மருத்துவ படிப்பு; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது
மருத்துவ படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
4. அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
5. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.