தேசிய செய்திகள்

ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 31 teachers, students test positive after school reopens for class 10, 12

ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று

ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர், 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சமீப காலங்களாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஒடிசாவில் 10 மற்றும் 12--ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டும், பள்ளிகள் திறந்த இரண்டே நாட்களில் 31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் திறக்கப்பட்டது; ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஒடிசாவில் பரபரப்பு: யானை மீது மோதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது
ஒடிசாவில் இன்று அதிகாலையில் யானை மீது மோதியதால் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது.
3. ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து
ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
5. ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி தங்கம்-பணம் கொள்ளை
ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம்-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.