மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை + "||" + Anti-corruption police raid the home of Environmental Pollution Control Department Superintendent Pandian

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில், சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க-வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையால் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.