தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர் ராஜஸ்தானில் கைது + "||" + Man arrested for spying for Pakistan

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர் ராஜஸ்தானில் கைது
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபரை சி.ஐ.டி. போலீசார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஜெய்சால்மர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயண் பாலிவால் (வயது 42).  பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை அவரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சி.ஐ.டி. போலீசார் (சிறப்பு பிரிவு) அவரை நாட்டுக்கு எதிராக உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஏஜெண்டுடன் தொடர்புப்படுத்தி கொண்டதும், நாட்டின் ராணுவம் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்ததும், அவற்றை ஏஜெண்டிடம் பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாலிவாலை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. (சிறப்பு பிரிவு) போலீசார் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
5. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.