மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + 4 districts in Tamil Nadu likely to receive heavy rains - Meteorological Department

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
2. தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.19,500 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று் நிர்மலா சீதாராமனிடம், ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது: 4 மாவட்டங்களில் மட்டும் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது. நேற்று 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வருகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று (செவ்வாய்கிழமை) முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.