மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் - கோவை மகளிர் நீதிமன்றம் + "||" + Heron Paul arrested in Pollachi sex case remanded in CBI custody for two days - Coimbatore Women's Court

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் - கோவை மகளிர் நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் - கோவை மகளிர் நீதிமன்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, 

2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரன் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது. 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவலுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ 5 நாள் காவல் கேட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹெரன் பால் விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில், காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், தினேஷ் ஆகியோருடன் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
2. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது
ஆவடி அருகே மருமகன் கொலை வழக்கில் ஒரு வருடம் கழித்து அவரது மாமியாரை போலீசார் கைது செய்தனர். தனக்கும், இளையமகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றது விசாரணையில் உறுதியானது.
3. கூத்தாநல்லூர் அருகே நர்சிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் கடை உரிமையாளர் கைது
கூத்தாநல்லூர் அருகே நர்சிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
4. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
5. கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் 4 பேர் கைது
கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரரை தாக்கிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.