தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93% குறைந்துள்ளன: மத்திய அரசு தகவல் + "||" + Terrorism in Kashmir has dropped by 63.93% in the last year: Federal Government data

காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93% குறைந்துள்ளன: மத்திய அரசு தகவல்

காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93% குறைந்துள்ளன:  மத்திய அரசு தகவல்
காஷ்மீரில் கடந்த 2020ம் ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93% குறைந்துள்ளன என மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 15 வரை நாட்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன என தெரிவித்து உள்ளது.

இந்த காலகட்டத்தில் சிறப்பு அதிகாரிகள் படை உயிரிழப்பு 29.11 சதவீதமும், குடிமக்கள் உயிரிழப்பு 14.28 சதவீதமும் குறைந்துள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது.  இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதன்பின்னர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 48 மத்திய சட்டங்களும் மற்றும் 167 மாநில சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.  லடாக்கில் 44 மத்திய சட்டங்களும் மற்றும் 148 மாநில சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.