தேசிய செய்திகள்

குஜராத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு + "||" + Gujarat Schools Reopen For Students Appearing In Board Exams With COVID-19 Restrictions

குஜராத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

குஜராத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
காந்திநகர்,

கொரோனா தொற்று காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கல்லூரிகள் குஜராத்தில்  மீண்டும் திறக்கப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையும் அனைவருக்கும் சோதனை செய்யப்படும் என்று மாநில கல்வித்துறை மந்திரி பூபேந்திரசிங் சூடாசமா தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின்வழி காட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.