தேசிய செய்திகள்

டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை + "||" + I would request the general public to not panic, the government is taking all precautionary measures Manish Sisodia, Deputy CM of Delhi

டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை

டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை
டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை விதித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றால் பொருளாதார தேக்கம், இயல்பு வாழ்க்கை முடக்கம், உயிரிழப்புகள் போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  ஆனால், அதற்குள் மற்றொரு புது விவகாரம் வெடித்து உள்ளது.  புது வருட தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

அரியானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9ந்தேதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.  

டெல்லியில் நேற்றும் டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.  இவற்றில் சரிதா விகார் பகுதியில் உள்ள மாவட்ட பூங்காவில் 24 காகங்களும், துவாரகா பகுதியில் 14 காகங்களும், ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன.  அவை மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பறவைகாய்ச்சல் பரவி வருவது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அரசாங்கம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.