தேசிய செய்திகள்

மத்திய அரசின் பிடிவாதத்தால் இந்தியா விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் - மம்தா பானர்ஜி + "||" + India will soon face food crisis if BJP remains adamant on new farm laws: Mamata

மத்திய அரசின் பிடிவாதத்தால் இந்தியா விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் - மம்தா பானர்ஜி

மத்திய அரசின் பிடிவாதத்தால் இந்தியா விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் - மம்தா பானர்ஜி
வேளாண் சட்டங்களில் மத்திய பாஜக அரசு பிடிவாதமாக இருந்தால் இந்தியா விரைவில் உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 48வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே இந்த சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. 

அப்போது, மத்திய அரசுக்கு, வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது: 

வேளாண் சட்டங்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களின் நலனுக்கு எதிரான எதையும் நாம் செய்யக்கூடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய் ஸ்ரீராம் என்பது அரசியல் வார்த்தை அல்ல: சிவசேனா
இந்த நாட்டில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுவதை யாரும் வேதனையாக நினைக்கக்கூடாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
2. இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’’ மம்தா பானர்ஜி கோரிக்கை
இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
3. மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகுவேன்: சுவேந்து அதிகாரி சவால்
மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
4. சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
வரும் சட்டசபை தேர்தலில் முடிந்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் - மம்தா பானர்ஜி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.