தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி + "||" + No Out-Of-Turn Vaccinations For Politicians, Cautions PM Modi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை,  ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

வருகிற 16-ந் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது.  

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி விநியோகம், பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்கள்  குறித்து ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

கொரோனா நெருக்கடியில் ஒற்றுமையாக  நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம் என்பதில் திருப்தி அடைகிறேன்.விரைவான முடிவுகள் முழு உணர்திறனுடன் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, கொரோனா உலக நாடுகளில் பரவியது போல்  இந்தியாவில் பரவவில்லை.

கொரோனா தடுப்பூசியின் போது  இந்தியாவின் தடுப்பூசி போட்ட கடந்த கால அனுபவம் கை கொடுக்கும். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு ஆகும்.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இரண்டு  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  தடுப்பூசிகளைத் தவிர, நாட்டில் இன்னும் நான்கு  தடுப்பூசிகள் உள்ளன.

முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு  தடுப்பூசி போடப்படும்.

சுகாதார ஊழியர்கள் ,  துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்னணி தொழிலாளர்கள், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்.

நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றவர்களை விட செலவு குறைந்தவை.மற்றும் நமது தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.

3 கோடி கொரோனா போர்வீரர்கள், முன்னணி தொழிலாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு  ஏற்கும்.

தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவுவதை  தடுப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்; இதில் சமூக, மத குழுக்கள் ஈடுபட வேண்டும்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தியா தடுப்பூசி ஒத்திகை  முடிந்துள்ளது, இது மிகப்பெரிய சாதனையாகும்.

கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. 6 நாட்களுக்குள் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை
10 லட்சம் தடுப்பூசியை மிக வேகமாக எட்டிய நாடு இந்தியா, இதை 6 நாட்களுக்குள் நாம் சாதித்துள்ளோம் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.
2. திரையரங்குகளில் 50 % க்கு மேல் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
திரையரங்குகளில் 50 சதவீத த்திற்கு மேல் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் ஒடிசாவில் பலி
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக பொய்பிரசாரத்தை தொடங்கி உள்ள சீனா
இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக சீனா குளோபல் டைம்ஸ் மூலம் பொய் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
5. ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 % அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.