மாநில செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்... வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி மனு + "||" + Love blossomed in Alankanallur Jallikkatu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்... வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி மனு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்... வாடிவாசலில் திருமணம் செய்ய அனுமதி கோரி மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல், வாடிவாசலில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. உலக தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பின் அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி மதுரையிலும், ஜல்லிக்கட்டு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மதுரையை சேர்ந்த வித்யாதரணி – எழுத்தாளர் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின் நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. 4ஆண்டுகள் காதலித்த இவர்கள், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஜனவரி 16 ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், வாடிவாசலில் எளிமையான முறையில் திருமணம் உறுதி  ஏற்பு நிகழ்ச்சி நடத்த  அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்

1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர் - 48 பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 719 காளைகளுடன் 600 வீரர்கள் மல்லுக்கட்டினர். அதில் 48 பேர் காயமடைந்தனர்.
2. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு : 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கண்ணனுக்கு க்விட் கார் பரிசு வழங்கப்பட்டது.
3. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை நடைபெறும்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெறும் கூடுதலாக 1 மணி நேரம் போட்டி நீடிக்கப்பட்டுள்ளது.
4. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.