தேசிய செய்திகள்

கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை வாபஸ் வாங்கிய சீனா..? + "||" + China moves back around 10,000 troops from depth areas near LAC in Eastern Ladakh

கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை வாபஸ் வாங்கிய சீனா..?

கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே  ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை வாபஸ் வாங்கிய சீனா..?
கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சீன ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

லடாக்கில் இந்திய, சீன எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.  கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், சென்ற ஆகஸ்டு 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியிலும் சீன துருப்புகள் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்தபோது இந்திய படைகள் பதிலடி கொடுத்து அந்த முயற்சியை தடுத்தன.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு, மறுபக்கம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலையில் சீனா ஈடுபட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் அசல்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னோக்கிய நிலைகளில் ஒன்றை நோக்கி நெருங்கி வர முயற்சித்தன. அதை இந்திய படை வீரர்கள் தடுக்க முயற்சித்தபோது, அவர்களை பயமுறுத்த துப்பாக்கி சூடு நடத்தி விட்டு பழியை இந்தியா மீது போட்டது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.  இதனால், எல்லையில் இருந்து சீன துருப்புகள் முகாம்களுக்கு விரைவில் திரும்பி விடும் என சீனா கூறியது. ஆனாலும் தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து, பதற்ற நிலையை நீடித்தது.

இதன்பின்னர் இரு நாட்டு தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்தியா மற்றும் சீன படைகளை எல்லையில் இருந்து திரும்ப பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  இதனால் எல்லை பகுதியில் சற்று பதற்றம் தணிந்து காணப்படுகிறது.

எல்லையை பதற்றத்தை குறைப்பதற்காக இரு தரப்பினரும் ஒன்பதாவது சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவும் சீனாவும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சீன ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் எல்லையை ஒட்டி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பத்தாயிரம் பேரும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருதரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்தியா - சீனா ராணுவம் இடையே படை வீரர்களை விலக்கி கொள்வதற்கு பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தி லடாக்கில் சீனா அத்துமீறல்;இந்தியா தக்க பதிலடி - பாதுகாப்பு ஆய்வறிக்கை
கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம், பலமுறை அத்துமீற முயன்றபோதும், அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தியபோதும், இந்திய ராணுவத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, உரிய பாடம் புகட்டப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள்
கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
3. கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள்
கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
4. கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, நிலைமை மேலும் மேம்படும்- இந்திய ராணுவ தலைமை தளபதி
கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நிலைமை மேலும் மேம்படும் என நம்புவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே கூறினார்.
5. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார்-இந்திய ராணுவம் அறிவிப்பு
கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.