உலக செய்திகள்

இந்தோனேசியா விமான விபத்து : கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்பு + "||" + Why Indonesia is the most dangerous place to fly in Asia? Take a look at reasons

இந்தோனேசியா விமான விபத்து : கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்பு

இந்தோனேசியா விமான விபத்து : கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்பு
இந்தோனேசியா விமான விபத்து நடந்த கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்புப் பணியாளர்களிடம் கிடைத்து வருகின்றன.
ஜகார்த்தா

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று கடந்த 9 ந்தேதி  புறப்பட்டு சென்றது.

ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.  மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இருக்குமிடம் தெரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் விமானத்தின் சக்கரம் போன்று தெரியும் ஒரு பாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்புப் பணியாளர்களிடம் கிடைத்து வருகின்றன.


கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்கள்  தேடுதல் பணியில் ஈடுபட்டு  உள்ளன.

விமானம் காணாமல் போன இடத்துக்கு அருகே உள்ள ஒரு தீவினைச் சேர்ந்த பலர் விமானத்தின் பாகங்கள் போன்று தோன்றும் பொருள்களைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய விமானம் ஒன்று 10,000 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்த நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்று எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

10,000 அடி உயரத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கடலில் விழுந்த அந்த விமானம் கடல் பரப்பை தொடுவது வரை உடையாமல் முழுமையாகவே இருந்ததாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் படம்பிடித்த ஒரு வீடியோவில் ஒரு சிறுகுழந்தையின்  பேக்  முதலான பொருட்களும், விமானத்தின் பாகங்களும் கூடவே மனித உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. அந்த உடல் பாகங்களை பயன்படுத்தி டிஎன்ஏபரிசோதனை செய்து இறந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து நடந்த கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்புப் பணியாளர்களிடம் கிடைத்து வருகின்றன.

போயிங்கின் 737-500 ஜெட் விமானம் எட்டு  விபத்துக்களில் சிக்கி உள்ளது. இவை அனைத்தும் விமான சேதத்தை சரிசெய்ய முடியாத சம்பவங்கள். இந்த விபத்துக்களில் மொத்தம் 220 உயிர்பலிகளும் நடந்துள்ளது.  இதில் செப்டம்பர் 2008 இல், ஏரோஃப்ளோட் பி.ஜே.எஸ்.சி 737-500 விமானம் விபத்துக்குள்ளானதில் 88 பேர் பலியாகினர். தொடர்ந்து ஜூலை 1993 -ல் ஆசியானா ஏர்லைன்ஸ் இன்க் விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்களுக்கு செயல்திறன், பயிற்சி அல்லது வானிலை தான் காரணம் என  புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீவிஜயா விமானம் 182 -ல் விபத்துக்குள்ளானதில், இதுவரை யாரும் உயிருடன் இருப்பதாக தெரியவில்லை.  737-500 இன் விபத்து இந்தோனேசியாவில், மூன்றாவது மிக மோசமான பேரழிவைக் குறிப்பதாக உள்ளது.

விமானப் பாதுகாப்பு வலையமைப்பின்புள்ளிவிவரங்கள்  இந்தோனேசியாவில் 1945 முதல்  104 பயணிகள்  விமான விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன என்றும்  1,300 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது ஆசியாவில் விமானங்களுக்கு  மிகவும் ஆபத்தான இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உண்டாகும் எரிமலை வெடிப்புகளால், உண்டாகும் துகள்கள், ஜெட் விமானத்தின் என்ஜின்களில் உறிஞ்சப்படுவதால், அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  2019 ஆம் ஆண்டில், அலி மவுண்ட் வெடித்ததைத் தொடர்ந்து பாலியின் விமான நிலையம் ரத்துசெய்யப்பட்டு அங்கிருந்து ஏராளமான விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. புவி வெப்பமடைதலுடன், தீவிர வானிலை நிகழ்வுகளும் மிகவும் பொதுவானதாகி வருகின்றன.