கேரளாவில் மேலும் 3,110- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,110- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,922- பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 63,346-ஆக உள்ளது. கொரோனாவில் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 389- ஆக உள்ளது.
கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.