உலக செய்திகள்

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது + "||" + China enacts rules to counter foreign laws

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.
பீஜிங், 

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.
மேலும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.‌ குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார்.

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உள்பட பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் புதிதாக 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக 74 வயது பெண் பதவியேற்பு
அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்று உள்ளார்.
3. அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
4. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
5. அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்
சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளைஎரித்து தங்கள் எதிர்ப்பை பாஜகவினர் பதிவு செய்தனர்.