தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்: கோவா முதல் மந்திரி + "||" + He (Union Minister Shripad Naik) is out of danger and his health condition is stable.

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்: கோவா முதல் மந்திரி

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்: கோவா முதல் மந்திரி
விபத்தில் படுகாயம் அடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
பானஜி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் ஆயுஷ் மற்றும் ராணுவ துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீபாத யசோ நாயக் (வயது 68). இவர் வடக்கு கோவா தொகுதி எம்.பி.யும் ஆவார். இவரது மனைவி விஜயாநாயக் (வயது 57).

நேற்று ஸ்ரீபாத யசோ நாயக், அவரது மனைவி விஜயாநாயக், உதவியாளர்கள் தீபக் ராம்தாஸ், சாய்கிரண் தேசியா, மந்திரியின் பாதுகாப்பு போலீஸ்காரர் துக்காராம் ஆகியோர் ஒரு காரில் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புராவில் உள்ள கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த கோவிலில் சாமி தரிசனம் முடிந்ததும் மந்திரி ஸ்ரீபாத யசோ நாயக் உள்ளிட்ட 5 பேரும் காரில் கோவாவுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். காரை டிரைவர் சுரஜ் நாயக் ஓட்டி சென்றனர். கார் அங்கோலா அருகே நியூஹம்பி பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி மந்திரி ஸ்ரீபாத யசோ நாயக்கின் மனைவி விஜயா நாயக்,உதவியாளர் தீபக் ராம்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் மந்திரி ஸ்ரீபாத யசோ நாயக் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அங்கோலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மந்திரி உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்கோலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மந்திரி ஸ்ரீபாத யசோ நாயக் அனுப்பி வைக்கப்பட்டார். மீதம் உள்ள 3 பேருக்கும் அங்கோலா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அங்கோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி ஸ்ரீபத் நாயக் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கோவா முதல் மந்திரி பிரோமத் சாவந்த் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீபாத் நாயக்கின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் இரவு இரண்டு சிறிய அளவில் இரண்டு அறுவை சிகிச்சைகள் நடக்க இருப்பதாகவும் கூறிய முதல் மந்திரி பிரமோத் சாவந்த்,  தற்போதைக்கு மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் பிரமோத் சாவந்த் கூறினார்.