மாநில செய்திகள்

தமிழக சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி சிறப்பாக பணியாற்றுகின்றன - ஆணைய துணைத்தலைவர் பாராட்டு + "||" + Central and State Governments work tirelessly for the betterment of Tamil Nadu minorities - Deputy Chairman of the Commission praised

தமிழக சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி சிறப்பாக பணியாற்றுகின்றன - ஆணைய துணைத்தலைவர் பாராட்டு

தமிழக சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி சிறப்பாக பணியாற்றுகின்றன - ஆணைய துணைத்தலைவர் பாராட்டு
தமிழக சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி சிறப்பாக பணியாற்றுகின்றன என்று தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவர் அதீப் ரஷித் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை,

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவர் அதீப் ரஷித் தலைமையில், பிரதமரின் 15 அம்சத் திட்டப்பணிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறையினால் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றிய ஆய்வுக்கூட்டம் சென்னை விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலாளர் பி.ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப்பின் நிருபர்களுக்கு அதீப் ரஷித் அளித்த பேட்டி வருமாறு:-

பிரதமரின் 15 அம்சத் திட்டப்பணிகள் மற்றும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக சம்பந்தப்பட்ட அரசுத்துறையினால் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றி பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டோம். சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.சிறுபான்மையினர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மத்திய அரசு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மொழிவாரி சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சிறுபான்மை பெண் குழந்தைகளுக்காகவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஹஜ் பயணிகளுக்கான புறப்பாடு மையமாக சென்னையை அறிவிக்கவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசிடம் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய சிறுபான்மையினர் ஆணைய செயலாளர் ஆனந்த், சென்னையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடங்கள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில் உள்ளன. அவற்றை, வாரியத்துக்கு வருவாய் தரும் வகையில் மாற்றுவது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். வக்பு வாரிய சொத்துகள் குறித்த தனிப்பட்ட புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.