மாநில செய்திகள்

17-ந்தேதி 104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை + "||" + 17th 104th Birthday Celebration M.G.R. To the idol Edappadi Palanisamy, O. Panneerselvam courtesy

17-ந்தேதி 104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

17-ந்தேதி 104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சென்னை,

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும், பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்கேற்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளன்று, அவருடைய நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். உருவச்சிலைகளுக்கும், அவருடைய படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.