மாநில செய்திகள்

திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் - தமிழக அரசு உத்தரவு + "||" + Jallikattu competition can be held in 6 districts including Dindigul and Tiruppur - Government of Tamil Nadu order

திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் - தமிழக அரசு உத்தரவு

திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் - தமிழக அரசு உத்தரவு
திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை போன்ற இடங்களிலும்...

தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்); சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு வியாபாரிக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கடையில் இருந்து குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில் பீடித்துண்டு இருந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
3. திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.