உலக செய்திகள்

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை; உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு நேரில் செல்கிறது + "||" + Not Looking For Someone To "Blame", Says WHO Ahead Of Covid Probe In China

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை; உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு நேரில் செல்கிறது

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை; உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு நேரில் செல்கிறது
கொரோனா உருவானது எப்படி என்று நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது.
பீஜிங், 

கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வன ரகங்கள் ஆகியவற்றை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, உலக சுகாதார நிறுவனம், விசாரணை நடத்த 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, சீனாவின் உகான் நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்த விரும்பியது. இதுபற்றிய தகவல் சீனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீனா அனுமதி தராமல் இழுத்தடித்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் ஆதனம், சீனாவின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இந்தநிலையில், உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது 14-ந் தேதி, உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு வந்து நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்று கூறியுள்ளது. இதன்மூலம், கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
2. மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி
மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா - 20 பேர் பலி
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
உலகமே கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், சீனாவின் உகான் நகரிலோ இயல்பு நிலை திரும்பி விட்டது.
5. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.