தேசிய செய்திகள்

கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சி + "||" + Indian Navy to hold mega coastal defence exercise covering over 7,500 kms of coastline

கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சி

கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சி
நாட்டின் கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சியில் ஈடுபட உள்ளது.
புதுடெல்லி, 

நாட்டின் கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘கடல் கண்காணிப்பு’ என்ற பெயரில் பிரமாண்ட கடலோர பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தடவை இப்பயிற்சி இன்றும், நாளையும் நடக்கிறது. நாட்டின் 7 ஆயிரத்து 516 கி.மீ. நீள கடலோர பகுதிகளில் பயிற்சி நடக்கிறது. 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பயிற்சி நடக்கிறது.