உலக செய்திகள்

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed to Portuguese president

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
மாட்ரிட்,

போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதியாக மார்சிலோ ரெபெலோ டிசோசா இருந்து வருகிறார்.  வருகிற 24ந்தேதி அந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  சமீபத்தில் 72 வயது பூர்த்தியான டிசோசா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.  இதன்பின்னர் நடந்த ஆன்டிபாடி பரிசோதனை முடிவிலும் பாதிப்பு இல்லை என முடிவானது.

ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றால் டிசோசா பாதிக்கப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.  இதனை அவரது அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்துள்ளது.

இதனை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் அவர் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் நாராயணசாமி உறுதி
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
2. அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. நியூசிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று: 3 நாட்களில் 31 பேருக்கு பாதிப்பு
நியூசிலாந்தில் கடந்த 3 நாட்களில் 31 பேருக்கு உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
4. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,645 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
5. குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.