இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தினால் ஹனுமா விஹாரி விளையாடவில்லை.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளன. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டி நேற்று டிரா ஆனது. இதனால் 4வது மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியே போட்டி தொடரை கைப்பற்றும்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வருகிற 15ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக சிட்னியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி இன்று பிரிஸ்பேன் புறப்பட்டு செல்கிறது.
இந்திய அணியில், நேற்றைய போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணி வெற்றிக்காக போராடிய ஹனுமா விஹாரி இடம் பெறவில்லை. அவருக்கு தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதனால், போட்டியில் விளையாடுவாரா, அல்லது தவற விடுவாரா என உறுதியாக கூற முடியவில்லை. எனினும் காயத்திற்கு சிகிச்சை பெற வேண்டிய சூழலில் 4வது டெஸ்ட் போட்டியில் விஹாரி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.