தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 12,584 பேருக்கு தொற்று உறுதி + "||" + India reports 12,584 new COVID-19 cases, 167 deaths in last 24 hours

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 12,584 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 12,584 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,179 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,327 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 18,385 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,11,294 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,16,558 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 18 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரத்து 887 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,97,056 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,788 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் இன்று 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆல்-அவுட்
இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆட்டமிழந்தது. கடைசி பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.
5. பிரிஸ்பேன் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா 62/ 2 - மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.