மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்ததில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மொரேனா,
மத்திய பிரதேசத்தின் மொரினா மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி மாநில மந்திரி நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காவல் நிலைய அதிகாரி உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
சம்பவம் நடந்த பகுதிக்கு மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த விவகாரம் பற்றி குழுவொன்று விசாரணை மேற்கொள்ளும். குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்ப முடியாது என கூறியுள்ளார்.