தேசிய செய்திகள்

ஓடும் சொகுசு பேருந்தில் இளம்பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்; கிளீனர் மீது வழக்கு + "||" + Teen raped 2 times on running luxury bus; Case on cleaner

ஓடும் சொகுசு பேருந்தில் இளம்பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்; கிளீனர் மீது வழக்கு

ஓடும் சொகுசு பேருந்தில் இளம்பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்; கிளீனர் மீது வழக்கு
மராட்டியத்தில் ஓடும் சொகுசு பேருந்தில் இளம்பெண் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வாஷிம்,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து புனே நோக்கி தனியார் நிறுவன சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  பேருந்தின் முன் பக்கம் அமர்ந்து பயணம் செய்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை பேருந்தின் நடுப்பகுதிக்கு செல்லும்படி கிளீனர் கூறியுள்ளார்.

இதன்பின்னர், இளம்பெண்ணை நெருங்கிய கிளீனர், பேருந்தில் இருந்து வெளியே வீசி விடுவேன் என்றும் கொலை செய்து விடுவேன் என்றும் அவரை மிரட்டி கிளீனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பின்னர் 2வது முறையும் மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பேருந்து புனே வந்த பின்னர் ரஞ்சன்காவன் போலீசாரிடம் இளம்பெண் சம்பவம் பற்றி புகார் தெரிவித்து உள்ளார்.  அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கிளீனருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

எனினும், சம்பவம் நடந்தது வாஷிம் மாவட்டம் என்பதனால், புனே நகர போலீசார் புகாரை வாஷிம் மாவட்டத்தின் மாலேகாவன் நகர காவல் நிலையத்திற்கு மாற்றினர்.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை
உத்தர பிரதேசத்தில் 2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 29 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கபட்டு உள்ளது.
2. 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு: சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சென்னையில் 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கில் சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
3. கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பெரம்பூரில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரிய வழக்கு தொடர்பாக, அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது - பரபரப்பு வாக்குமூலம்
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
5. சென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
சென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.