தேசிய செய்திகள்

நீதிமன்ற கமிட்டிக்கு செல்ல விருப்பம் இல்லாத விவசாயிகள் போராட போகலாம்: சுப்ரீம் கோர்ட்டு + "||" + Farmers who do not want to go to court committee may go to fight: SC

நீதிமன்ற கமிட்டிக்கு செல்ல விருப்பம் இல்லாத விவசாயிகள் போராட போகலாம்: சுப்ரீம் கோர்ட்டு

நீதிமன்ற கமிட்டிக்கு செல்ல விருப்பம் இல்லாத விவசாயிகள் போராட போகலாம்:  சுப்ரீம் கோர்ட்டு
நீதிமன்ற கமிட்டிக்கு செல்ல விருப்பம் இல்லாத விவசாயிகள் போராட போகலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை நேற்றைய தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.  ஆனால், கடந்த 7ந்தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.  இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.  என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிலர் தற்கொலை செய்துள்ளனர்.  வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.  என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டார்.

விவசாயிகளுடனான பேச்சு திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டங்களை நிறுத்த கோரிய மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா, கோர்ட்டு அமைக்கும் கமிட்டி முன்பு ஆஜராக முடியாது என விவசாயிகள் கூறியுள்ளனர் என நீதிமன்றத்தில் கூறினார்.

இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறும்பொழுது, சட்டங்களையும் மதிக்க வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  போராட்டங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் வாழ்வு மற்றும் உடைமைகள் ஆகியவற்றையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எங்களுக்குள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு விவகாரங்களை தீர்க்க நாங்கள் முயல்கிறோம்.  அவற்றில் ஒன்று சட்டங்களுக்கு தற்காலிக தடை விதித்து, கமிட்டி அமைப்பது.

இந்த கமிட்டி எங்களுக்கானது.  விவகாரம் தீர்க்கப்பட் வேண்டும் என விரும்புபவர்கள் கமிட்டிக்கு செல்லலாம்.  இந்த கமிட்டி உத்தரவுகளை பிறப்பிக்கவோ அல்லது உங்களை தண்டிக்கவோ செய்யாது.  அறிக்கையை மட்டுமே எங்களிடம் சமர்ப்பிக்கும் என கூறினார்.

விவசாயிகள் கமிட்டிக்கு செல்லமாட்டோம் என கூறும் வாதங்களை கேட்க நாங்கள் விரும்பவில்லை.  விவகாரத்திற்கு தீர்வு எட்ட நாங்கள் கவனித்து வருகிறோம்.  நீங்கள் (விவசாயிகள்) காலவரையின்றி போராட விரும்பினால் நீங்கள் போகலாம் என கூறியுள்ளார்.