2021ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறியீடு: ஜப்பானுக்கு முதல் இடம்; கடைசியில் பாகிஸ்தான் + "||" + Powerful Passport Code of 2021: First place for Japan; Pakistan last place
2021ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறியீடு: ஜப்பானுக்கு முதல் இடம்; கடைசியில் பாகிஸ்தான்
2021ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டு வரிசையில் ஜப்பான் நாட்டுக்கான பாஸ்போர்ட் முதல் இடம் பிடித்து உள்ளது.
டோக்கியோ,
உலக நாடுகளில், குடிமக்கள் தங்களது நாடுகளில் இருந்து சுற்றுலா, வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட விசயங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். எனினும், அவற்றுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்ல விசா அனுமதி அவசியம்.
இவற்றில் ஜப்பான் நாட்டு மக்கள் 191 நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா அனுமதி வழங்கப்படுகிறது என ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு தெரிவித்து உள்ளது. இதன்படி, உலக நாடுகளில் 2021ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டு வரிசையில் ஜப்பான் நாட்டுக்கு (191 புள்ளிகள்) முதல் இடம் கிடைத்துள்ளது.
2வது இடத்தில் சிங்கப்பூர் (190 புள்ளிகள்) உள்ளது. 3வது இடத்தில் தென்கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகள் (189 புள்ளிகள்) பகிர்ந்து கொண்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் (185 புள்ளிகள்) 7வது இடத்தில் உள்ளன. 8வது இடத்தில் ஆஸ்திரேலியா (184 புள்ளிகள்) உள்ளன. இவற்றில் 58 புள்ளிகளுடன் இந்தியா 85வது இடத்தில் உள்ளது. நேபாளம் 104வது இடத்திலும், பாகிஸ்தான் 107வது இடத்திலும் உள்ளன.