தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார் + "||" + Thailand Open: Sindhu, Sai Praneeth bow out in first round
தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்
தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
பாங்காங்க்
யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது. இதற்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்து ஓபன் போட்டி இன்று முதல் 17-ம் தேதி வரையிலும், டொயோட்டா தாய்லாந்து ஓபன் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடக்கிறது.
தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
முதல் போட்டியில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர்.முதல் சுற்றில் 21க்கு 16 என்ற செட் கணக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து, அடுத்த இரண்டு சுற்றுகளில் 24-க்கு 26, 13க்கு 21 என்ற செட் கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தார்.