மாநில செய்திகள்

வழுக்கையை மறைத்த விக் கழண்டு விழுந்தது ; ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கணவர் மீது மனைவி போலீசில் புகார் + "||" + Wife complains to police about cheating married husband

வழுக்கையை மறைத்த விக் கழண்டு விழுந்தது ; ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கணவர் மீது மனைவி போலீசில் புகார்

வழுக்கையை மறைத்த விக் கழண்டு விழுந்தது ; ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கணவர் மீது மனைவி போலீசில் புகார்
வழுக்கை தலையை மறைத்து தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி போலீசில் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை

சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 29). கடந்த 2015 ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் ராஜசேகரன் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. ஒரு கட்டத்தில் மனைவியின் வற்புறுத்தலால் ராஜசேகர் அவருடன் சந்தோஷமாக இருக்க முயன்றார். அப்போது, ராஜசேகர் தலையில் இருந்த விக் கழண்டு விழுந்தது. இதனால், தலையில் முடியில்லாமல் வழுக்கை தலையாக இருத்து மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மனைவிக்கும் கணவருக்கும் தகராறு ஏ ற்பட்டுள்ளது. மேலும், மனைவியின் நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி வாங்கி அவற்றை விற்று செலவு செய்துள்ளார். தன்னை பற்றிய உண்மைகள் தெரிந்ததால், ராஜசேகரன் மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், தலையில் முடி இருப்பது போல் விக் வைத்து கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தை பதிவிட்டு ராஜசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் வரதட்சணையாக கொடுத்த 58 சவரன் நகைகளை ராஜசேகர் செலவு செய்துவிட்டு வங்கியில் இருப்பதாக கூறி பொய் சொன்னதாகவும் , இதுகுறித்து தெரிந்த உடன் ராஜசேகர் அடித்து துன்புறுத்துவதாக இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தார். தொடர்ந்து, இரு தரப்புக்கும் சமரச பேச்சு நடந்தது. ஆனால், தீர்வு ஏற்படவில்லை.

இதனால், புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் ராஜசேகர், தாயார், ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.