மாநில செய்திகள்

தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 அக உயர்வு + "||" + Private bus crashes into power line in Thanjavur death toll rose to 4 internally

தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 அக உயர்வு

தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 அக உயர்வு
தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 அக உயர்ந்து உள்ளது.
தஞ்சை: 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி  தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.   சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பஸ் இறங்கியது.

அப்போது, பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே   ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தின் படிகட்டில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.