பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன -ராணுவ தலைமை தளபதி + "||" + Pakistan, China form potent threat, their collusivity cannot be wished away: Army Chief Gen Naravane
பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன -ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறினார்.
புதுடெல்லி:
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:-
பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அதனை ஒருபோதும் நாம் சகித்து கொள்ளமாட்டோம். சரியான தருணத்தில் மற்றும் சரியான இடத்தில், தேர்ந்தெடுத்து பதிலடி கொடுப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. இந்த தெளிவான செய்தியை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கள் வடக்கு எல்லைகள் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் நம்புகிறோம் ஒரு அமைதியான தீர்வுக்காக ஆனால் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க தயாராக இருகிறோம்.
வருங்கால சவால்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடனான விரிவான வரைபடம் தயாராகி வருகிறது.
வடக்கு எல்லைகளில் துருப்புக்களை மறுசீரமைப்பது பற்றி ஒரு தேவை உள்ளது.
பரஸ்பர மற்றும் சமமான பாதுகாப்பின் அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவும் சீனாவும் படைகள் வாபஸ் மற்றும் விரிவாக்கத்திற்கான ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று தான் நம்புகிறேன்.இந்த பிரச்சினையில் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
லடாக் மட்டுமல்லாமல், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலும் இந்திய துருப்புக்கள் அதிக அளவு விழிப்புணர்வுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என கூறினார்.