உலக செய்திகள்

தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை -டொனால்டு டிரம்ப் + "||" + Trump says impeachment moves causing anger but I want no violence'

தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை -டொனால்டு டிரம்ப்

தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும்,  நான் வன்முறையை விரும்பவில்லை -டொனால்டு டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் தன் மீது குற்றஞ்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருப்பதாகவும், ஆனால் அவர் வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறினார்.
வாஷிங்டன்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பபை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. ஆனால் தன்மீது  குற்றஞ்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருப்பதாகவும், ஆனால் அவர் வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறினார்.

டெக்சாஸின் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு  பயணம்  மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுஇயதாவது:-

நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை.என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு  மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம்சாட்டுகின்றனர்.  அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு பயங்கரமான விஷயம். கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, அவருக்கு எதிரான சூழ்ழ்ச்சியின்  தொடர்ச்சியாகும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஆனால் கலவரத்தைத் தூண்டுவதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் கணக்குகள் முடக்கம் - டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் அதிரடி
டிரம்ப் கணக்குகளை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதள நிறுவனங்கள் முடக்கி உள்ளன.
2. தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்; அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெற உறுதி
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க ஜானாதிபதி டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.