தேசிய செய்திகள்

திபெத்தில் சீனா புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வருவதை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் + "||" + Satellite imagery shows China creating new military logistics hub in Tibet

திபெத்தில் சீனா புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வருவதை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

திபெத்தில் சீனா புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வருவதை  காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
திபெத்தில் மிகப்பெரிய பாதாள சுரங்கப்பாதைகளில் ராணுவ வசதியையும், ராணுவ சரக்குப்போக்குவரத்து மையத்தையும் சீனா கட்டமைத்து வருவதாக, செயற்கைக்கோள் புகைப்படங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி

திபெத்தின் ஜிகாட்ஸே பகுதியில் விமான நிலையம் அருகே, சீனா ஏற்படுத்தி வரும் இந்த புதிய அண்டர்கிரவுண்ட் கட்டுமானம், ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கான சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதிய செயற்கைக்கோள் படங்களின் படி, திபெத்தின் ஜிகாட்ஸில் ஒரு பெரிய இராணுவ தளவாட மையத்தை  சீனா செயல்படுத்திவருகிறது. உண்மையான கட்டுப்பாட்டு வரி (எல்ஐசி) முழுவதும் செயல்பாடுவதற்கான  இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சீனாவின்  முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் ராணுவ நடவடிக்கைகளுக்கு வசதியாக அக்சாய் சின் முதல் அருணாச்சலப்பிரதேசம் எல்லை வரை உள்கட்டமைப்புகளை சீனா மேம்படுத்தி வருகிறது.

சீனாவின் பிற பகுதிகளில் இருந்து திபெத்திற்கும், திபெத்திற்குள்ளும், பெரும் எண்ணிக்கையில் படைகளை நகர்த்துவதே சீனாவின் நோக்கம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

டுவிட்டரில் திறந்த-மூல புலனாய்வு ஆய்வாளரால் பகிரப்பட்ட  புதிய செயற்கைக்கோள் படங்களில்   ஜிகாட்ஸ் விமான நிலையத்திற்கு தெற்கே உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தெரிகின்றன.  இது ஒருரெயில் ஜங்ஷனுடன் இணைக்கிறது. சீனா இராணுவத்திற்கான  ஒரு தளவாட மையமாக உள்கட்டமைப்பு இருக்கும் என்று படங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த தகவல்களுக்கு  இந்திய அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.