மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Opening of schools: ‘The decision was taken in consultation with parents and teachers’ - Interview with Minister Jayakumar

பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

வேளாண் திருத்த சட்டம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான். வேளாண் சட்டம் தொடர்பாக ஏற்கனவே விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு பற்றி சாதி வாரி கணக்கெடுப்பு முடிந்து அரசிற்கு அறிக்கை அளித்த பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அக்கட்சியில் பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தொடர்பாக தீவிரமாக யோசித்து தான் முடிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. "பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.
2. பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கு வரத் தொடங்கிய மாணவர்கள் - நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை!
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
3. பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்ட பின்னர் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4. பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்பை நாளை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5. பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைக்கலாம் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைப்பதில் தவறில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.