தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக 15-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுமா? - வேளாண் இணை மந்திரி விளக்கம் + "||" + Will the talks take place on the 15th due to the Supreme Court order? - Description of the Associate Minister of Agriculture

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக 15-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுமா? - வேளாண் இணை மந்திரி விளக்கம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக 15-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுமா? - வேளாண் இணை மந்திரி விளக்கம்
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக, 15-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்குமா என்று மத்திய வேளாண் துறை இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக, 15-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி கூறியதாவது:-

மத்திய அரசு இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே உள்ளோம். , பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து விவசாய சங்கங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, எங்கள் விருப்பத்துக்கு எதிரானது. வேளாண் சட்டங்கள் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம். 

இருப்பினும், கோர்ட்டு உத்தரவு, அனைவருக்கும் பொருந்தக்கூடியது. உண்மையிலேயே, பாரபட்சமற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, நாடு முழுவதும் விவசாயிகள மற்றும் நிபுணர்களின் கருத்துகளை பெறும். அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கும். அதை பரிசீலித்து சுப்ரீம் கோா்ட்டு விரைவில் முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.