மாநில செய்திகள்

விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு + "||" + First Minister Edappadi Palanisamy inspects Jayalalithaa memorial as it is about to open soon

விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருக்கும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை,

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

நினைவிட திறப்புவிழா விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 12 மணி அளவில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்றார். நினைவிடம் அருகில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம், அறிவுசார் பூங்கா, பீனிக்ஸ் பறவையின் அமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் சுற்றி பார்வையிட்டார்.

எம்.ஜி.ஆர். நினைவிடம் சென்று அங்கு நடந்து முடிந்த சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

உடன் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.
2. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
3. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு
ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4. ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி முதல் வாரம் அரசிடம் ஒப்படைப்பு - அதிகாரிகள் தகவல்
மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
5. ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா - பொதுப்பணித்துறை தீவிரம்
ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.12 கோடியில் 13 ஆயிரம் சதுர அடியில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட உள்ளது.