மாநில செய்திகள்

திருப்பத்தூர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி - தமிழக அரசு + "||" + Permission to hold Jallikattu competitions at 39 places in Tiruppatur, Sivagangai and Vellore districts - Government of Tamil Nadu

திருப்பத்தூர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி - தமிழக அரசு

திருப்பத்தூர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி - தமிழக அரசு
திருப்பத்தூர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோல திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 14-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சகல்லூர், ஓம்பாலக்காடு, கும்மானூர்; திருப்பத்தூர் மாவட்டம் காசிநாயக்கன்பட்டி, துக்கியம், கல்நார்சம்பட்டி, வெள்ளக்குட்டை, வள்ளிப்பட்டு, கோதுர், கொத்தகோட்டை, நிம்மியம்பட்டு, மூக்கனூர், தேக்குப்பட்டு, கோதண்டகுப்பம், வீரன்குப்பம், நரியம்பட்டு;

சிவகங்கை, வேலூர்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு; வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சிவநாதபுரம், குத்லவாரிபள்ளி, பனமடங்கி, கீழ்முத்துகூர், மூஞ்சுர்பட்டு, சோழவரம், கோவிந்தரெட்டிபாளையம், கீழரசம்பட்டு, வி.மதுர், பாக்கம்பாளையம்,

சேர்பாடி, புள்ளிமேடு, பெரிய ஏரியூர், கீழ்கொத்தூர், ஊசூர், மேல்மயில், கம்மவான்பேட்டை, கீழ்வல்லம், கரசமங்கலம், அரியூர், இறைவன்காடு, ஆற்காட்டான் குடிசை, சின்னபாலம்பாக்கம், வந்தரந்தாங்கல் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆங்கில புத்தாண்டு தினம்: சிவகங்கை மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
2. கிறிஸ்துமஸ் பண்டிகை: சிவகங்கை மாவட்ட தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை; திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
3. சிவகங்கை மாவட்டத்தில் தங்கக்கட்டிகள் வாங்கி தருவதாக கூறி 200 பவுன் நகை; ரூ.1 கோடி மோசடி; தம்பதி கைது
காரைக்குடியில் தங்கக்கட்டிகள் வாங்கி தருவதாக கூறி 200 பவுன் நகை, ரூ.1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
4. சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் போலீஸ் தேர்வு எழுதுகிறார்கள்; கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுரை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று போலீஸ் தேர்வு நடைபெறுகிறது. இதில் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். கட்டாயம் முககவசம் அணிந்து வந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. திருப்பத்தூர் அருகே, பனிமூட்டம் காரணமாக தரை இறங்கிய ஹெலிகாப்டர் - பொதுமக்கள் பார்க்க குவிந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே பனிமூட்டம் காரணமாக தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இதனை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.