மாநில செய்திகள்

98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் - அமைச்சர் செங்கோட்டையன் + "||" + 98% of students prefer to come to school Minister Senkottayan

98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் - அமைச்சர் செங்கோட்டையன்

98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் - அமைச்சர் செங்கோட்டையன்
98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபிச்செட்டிபாளையம்,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.

அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு சாரார் திறக்கலாம் என்றும், மற்றொரு சாரார் திறக்க வேண்டாம் என்று கருத்துகள் தெரிவித்ததாலும், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு கருத்துகள் கூறி வந்ததாலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்க அரசு திட்டமிட்டது.

அதன்படி, கடந்த 6, 7-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோரை நேரில் வரவழைத்து கருத்துகள் கேட்கப்பட்டன. அந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் பள்ளி வகுப்புகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோபி அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்கட்டமாக திறக்கப்படும் 10,12-ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயராக உள்ளன. ஆய்வு செய்து படிப்படியாக பிற வகுப்புகளும் திறக்கப்படும். விருப்பம் உள்ள 10.12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், 98% மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்புகின்றனர்.  விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி வரலாம். மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. "பொது தேர்வு தேதிகளை முதல்-அமைச்சர் அறிவிப்பார்" - அமைச்சர் செங்கோட்டையன்
பொது தேர்வு தேதிகளை முதல்-அமைச்சர் தான் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
2. தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் இன்று முதல் கருத்துக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று முதல், இந்த வாரம் இறுதி வரை கருத்துக்கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
3. "நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
4. ஜனவரி 15-ந் தேதிக்கு பின்பு 7,200 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் வருகிற ஜனவரி 15-ந் தேதிக்கு பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
5. பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.