மாநில செய்திகள்

தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Rs 3 lakh relief for Thanjavur bus accident victims' Chief Minister Edappadi Palanisamy

தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, எதிர்பாராத விதமாக மின்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.