உலக செய்திகள்

நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் சர்ச்சைக்குரிய பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் + "||" + Four Chinese ships enter Japan's territorial waters near disputed islands

நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் சர்ச்சைக்குரிய பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்

நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் சர்ச்சைக்குரிய பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்
சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டோக்கியோ

2021-ல் இடம்பெற்ற முதல் எல்லை மீறல் இதுவாகும். 2020 ஆம் ஆண்டில், சீனக் கப்பல்கள் அதன் கடல் எல்லையை மீறியதாக 24 வழக்குகளையும், சீனக் கப்பல்கள் ஜப்பானின் எல்லை மண்டலத்திற்குள் நுழைந்ததாக 333 வழக்குகளையும் ஜப்பான் பதிவு செய்து உள்ளது.

அக்டோபர் நடுப்பகுதியில், சீனாவின் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைந்து 57 மணிநேரங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறின. ஜூலை மாதம் சீனக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலில் 39 மணி நேரம் இருந்தன.

டயோயுடாவோ தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுகள் நீண்ட காலமாக சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பிராந்திய மோதல்களின் மைய புள்ளியாக இருந்து வருகிறது.இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, தீவுகள் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டு 1972-ல் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜப்பான் சட்டவிரோதமாக அவற்றைக் கைப்பற்றியதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.