யூடியூப் சேனல்களில் ஆபாசமாக பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை + "||" + On YouTube channel sIf you take obscene interviews and broadcast Heavy action Police Commissioner warned
யூடியூப் சேனல்களில் ஆபாசமாக பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
யூடியூப் சேனல்களில் ஆபாசமாக மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சென்னை
சென்னையில் பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்து யூடியூப்பில் ஒளிபரப்பிய புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களில் ஆபாசமாக மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரா போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கனவே இது போன்று பதிவு செய்துள்ள காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க உள்ளதாகவும் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.