உலக செய்திகள்

டிரம்பிற்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை + "||" + YouTube removes new content uploaded to Trump's channel

டிரம்பிற்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை

டிரம்பிற்கு  யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை
டிரம்பின் சேனலுக்கு யூட்யூப் கட்டுப்பாடு விதித்து உள்ளது. 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை விதித்து உள்ளது
வாஷிங்டன்

யூட்யூப் சமூக வலைதள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் வீடியோக்கள் வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் யூட்யூப்  பக்கத்தில் புதிய வீடியோக்களை 7 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை யூட்யூப் நிறுவனம் விதித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பதிவேற்றிய காணொளி வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் நிறுவனம் கருதுகிறது.

அந்த வீடியோக்கள்  யூட்யூப் கொள்கை விதிகளை மீறும் வகையில் இருப்பதால் டிரம்பின் பக்கத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் புதிய காணொளிகளை பதிவேற்றவும், லைவ்-ஸ்ட்ரீமிங் எனப்படும் வீடியோக்களை  ஒளிபரப்பரவும் அடுத்த ஏழு நாட்களுக்கு முடியாது. இந்த நாட்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பதவிக்காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்கள் பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது பதவிக்காலத்தில், 30,573 பொய்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்க முயற்சி:சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
3. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி டிரம்ப்; ஹாலிவுட் நடிகர் விமர்சனம்
அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார் என்று அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விமர்சித்துள்ளார்.
4. ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்
ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.
5. டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை ஈரான் அதிபர் ரூஹானி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் ரூஹானி வெளிப்படையாக பேசியுள்ளார்.