தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர் + "||" + Karnataka CM BS Yediyurappa expands cabinet, 7 new ministers sworn-in

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
பெங்களூரு

கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து கர்நாடக மந்திாிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்தார். அதனை நேற்று அதிகாரபூர்வமாக் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக கவர்னர்  வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் மந்திரியும் அடங்குவார்.

பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4-வது முறையாக தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 1,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
கர்நாடகாவில் இன்று மேலும் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.