சினிமா செய்திகள்

எதுக்கு போராடுகிறோம் என்றே தெரியாது: விவசாயிகள் போராட்டம் குறித்து எம்பி ஹேமா மாலினி சர்ச்சை கருத்து + "||" + BJP political leader Hema Malini said farmers agitating at the borders of Delhi don't know what they want and added that they are only protesting because someone had asked them to do so.

எதுக்கு போராடுகிறோம் என்றே தெரியாது: விவசாயிகள் போராட்டம் குறித்து எம்பி ஹேமா மாலினி சர்ச்சை கருத்து

எதுக்கு போராடுகிறோம் என்றே தெரியாது: விவசாயிகள் போராட்டம் குறித்து எம்பி ஹேமா மாலினி சர்ச்சை கருத்து
எதுக்கு போராடுகிறோம் என்றே தெரியாது: விவசாயிகள் குறித்து பா.ஜனதா எம்பி சர்ச்சை கருத்து கூறி உள்ளார்.
புதுடெல்லி: 

உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதி பா.ஜனதா  எம்பியும், நடிகையுமான ஹேமா மாலினி, விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு, தங்களுக்கு என்ன வேண்டும் என்றோ, அந்த சட்டங்களால் தங்களுக்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாது. அவர்கள் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில்,  விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். யாரோ ஒருவர் போராட சொன்னதால் அவர்கள் போராடி வருகிறார்கள் என்று கூறினார்.

அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே கர்நாடக பாஜக எம்பி எஸ்.முனிசாமி, ‘டெல்லியின் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணம் கொடுத்து அவர்கள் போராட்ட களத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் இடைத்தரகர்கள் மற்றும் போலி விவசாயிகள். அவர்கள் பீட்சா, பர்கர் சாப்பிடுகிறார்கள்’ என்றார். 

இதேபோல், ராஜஸ்தான் பா.ஜனதா  எம்.எல்.ஏ மதன் திலாவர் என்பவர், ‘போராட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்றனர். அவர்கள் மூலம் பறவைக் காய்ச்சல் பரப்ப சதித்திட்டம் தீட்டப்படுகிறது. போராட்ட களத்தில் இருப்பவர்களில் விவசாயிகளின் எதிரிகளும் இருக்கலாம். அவர்களை அங்கிருந்து அகற்றவில்லை என்றால், பறவைக் காய்ச்சல் பரவல் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும்’ என கூறி இருந்தார்


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; முதல்-மந்திரி உத்தவ் உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
2. வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு - சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு தகவல்
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்தவுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார்.
3. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழுவின் முன் அரசாங்கம் தனது தரப்பை முன்வைக்கும் -மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடுத்த கட்ட பேச்சுவர்த்தை 19 ந்தேதி நடைபெறும்
4. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது .அடுத்த கட்ட பேச்சுவர்த்தை 19 ந்தேதி நடைபெறும்.
5. நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்
விவசாயிகளுடன் நாளை மதியம் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.