சினிமா செய்திகள்

விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...? + "||" + Master Vijay VijaySethupathi

விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?

விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
சென்னை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். 

தற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர்.உலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் விஜய்யின் மாஸ்டர்.

மேலும் நியூசிலாந்த் நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.

இப்படத்தை காண திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களில் திரையரங்கில் சென்றது மட்டுமின்றி மாஸ்டர் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மாஸ்டர் குறித்து கூறுகையில், "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் பார்த்து ரசித்தேன். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யின் மாஸ்டர் பீஸாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார் விஜய் என கூறி உள்ளார்.
மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பார்த்துள்ளார். காரில் மாஸ்டர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன் என அவர் இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி வைரலாகி வருகிறது. பைரவா மற்றும் சர்கார் என இரு விஜய் படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ், தியேட்டர் பால்கனியில் அமர்ந்து கொண்டு படம் பார்க்கும் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஒரு வருடத்திற்கு பிறகு, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்ப்பது ரொம்பவே எக்ஸைட்டிங்காக இருக்கு, இது மாஸ்டர் பொங்கல் டா என டுவீட் போட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா டீசர் வெளியீடு
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
3. லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா போலீசார் எச்சரிக்கை
பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
4. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி விதி மீறல் - தமிழக அரசுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
5. புத்தகங்கள் மட்டுமே ஒருவரை படித்தவராக நிர்ணயித்திருந்தால், நமக்கு காமராஜர் கிடைத்திருக்க மாட்டார் - நடிகை குஷ்பு
புத்தகங்கள் மட்டுமே ஒருவரை படித்தவராக நிர்ணயித்திருந்தால், நமக்கு காமராஜர் கிடைத்திருக்க மாட்டார் என நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.