தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு + "||" + In Madhya Pradesh 6 more die after drinking counterfeit liquor

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
போபால், 

மத்தியபிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளச்சாராயம் பருகிய பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் கள்ளச்சாராய மொத்த சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மொரேனா, குவாலியர் மருத்துவமனைகளில் 21 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது சம்பந்தமாக 7 பேரை தேடிவருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தகவல் தெரிவித்தால் தலா ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக ஓர் உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்தி ஆலோசித்த முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மொரேனா மாவட்ட கலெக்டரையும், சூப்பிரண்டையும் உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
2. மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.