தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு + "||" + govt defers national polio immunisation programme

மறு உத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு

மறு உத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு
மறுஉத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி, 

போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமீபத்தில் அறிவித்தார். விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, சொட்டு மருந்து போடப்படும் என்று அவர் கூறினார். 

இப்பணி, 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘‘17-ந் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, சைமா கடிதம்
தென் மாநிலங்களில் பருத்தி குடோன் அமைக்க வேண்டும் என சைமா சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2. டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணிக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்; மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணியை தடை செய்யாமல், அதற்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
3. கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. 1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கொள்முதல்; மத்திய அரசு நடவடிக்கை
முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக, 1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
5. டெல்லியில் தொடர் மழை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அவதி
டெல்லியில் தொடர் மழை பெய்து வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.