மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை + "||" + 33 Tamil fishermen arrested by Sri Lanka Navy released

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமேசுவரம், 

தமிழகத்தை சேர்ந்த 52 மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதில் ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 26 பேர் நேற்று இலங்கையில் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 26 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மீனவர்களின் படகுகளை அரசுடைமை ஆக்குவதாகவும், மீண்டும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரும்பட்சத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது..

இவர்கள் தவிர இன்னும் இலங்கை சிறையில் ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்கள், தஞ்சாவூரை சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 12 பேர் உள்ளனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.